ADDED : ஏப் 22, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி:
வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து பகுதியில், செயல் அலுவலர் கணேசன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சிங்காரவேல் (பொ), டவுன் பஞ்சாயத்து துப்புரவு ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், குட்கா பொருட்கள் மற்றும் நெகிழிப்பைகள் விற்பனை குறித்து, நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதில், 7வது வார்டில் எழில் நகரில் டீக்கடையில், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து அந்த கடையில், 4.295 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அந்த கடைக்கு சீல் வைத்தனர். மேலும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர். தொடர்ந்து மளிகை, டீக்கடை, பேக்கரி உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டு, 6 கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்து, 3,800 ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர்.