/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் பெயரை மாற்ற திட்டம் தி.மு.க.,வை கண்டித்து காங்., சாலை மறியல்
/
மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் பெயரை மாற்ற திட்டம் தி.மு.க.,வை கண்டித்து காங்., சாலை மறியல்
மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் பெயரை மாற்ற திட்டம் தி.மு.க.,வை கண்டித்து காங்., சாலை மறியல்
மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் பெயரை மாற்ற திட்டம் தி.மு.க.,வை கண்டித்து காங்., சாலை மறியல்
ADDED : ஜன 27, 2025 03:06 AM
மேட்டூர்: மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறி, தி.மு.க.,வை கண்டித்து, காங்., கட்சியினர் மறியலில் ஈடு-பட்டனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி பஸ் ஸ்டாண்டுக்கு, 1984ல் காங்., சார்பில், இந்திராகாந்தி பெயர் சூட்டப்பட்டது. அப்பெயர் பஸ் ஸ்டாண்ட் கடைகள் முன்புறம் எழுதப்பட்டிருந்தது. காலப்-போக்கில் அழிந்து விட்டது. தற்போது பஸ் ஸ்டாண்ட் பெயரை மாற்ற, தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக, காங்., கட்சியினருக்கு தகவல் கிடைத்தது.இதனால் நேற்று காலை, காங்., கட்சி பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி தலைமையில், மாவட்ட தலைவர் ஜெயகுமார், பொருளாளர் ரத்தினவேலு, மேச்சேரி வடக்கு, தெற்கு ஒன்றிய தலைவர்கள் மல்லிகார்ஜூனன், முருகன் உள்ளிட்டோர், பஸ் ஸ்டாண்ட் அருகே கூடினர். தொடர்ந்து புறக்காவல் நிலையம் அருகே, இரு இடங்களில் இரும்பு கம்பிகள் நட்டு, ' இந்திரா-காந்தி பஸ் ஸ்டாண்ட்' என்ற பெயருடன் பேனர் கட்ட முயன்-றனர்.
மேச்சேரி டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திருநாவுக்கரசு, மேட்டூர் தாசில்தார் ரமேஷ், டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் உள்ளிட்ட போலீசார் வந்தனர். தொடர்ந்து காங்., நிர்வாகிகளிடம் பேச்சு நடத்தினர். அப்போது செயல் அலுவலர், 'முறையாக அனுமதி பெற்று பேனர் வைக்க வேண்டும்' என அறிவுறுத்தி, ஊழியர்கள் மூலம் பேனரை அகற்றினர். இதற்கு கண்டனம் தெரிவித்து, 'தி.மு.க., அராஜகம் ஒழிக' என கோஷமிட்டபடி, காங்., கட்சி-யினர், பஸ் ஸ்டாண்ட் அருகே தொப்பூர் நெடுஞ்சாலையில் மறி-யலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
அதில் சமரசமான கட்சியினர், 'ஒரு வாரத்தில் பெயர் பலகை வைக்க அனுமதி வழங்காவிடில் சாலை மறியல் அல்லது உண்-ணாவிரதத்தில் ஈடுபடுவோம்' என எச்சரித்து, மறியலை கைவிட்-டனர். இச்சம்பவத்தால், 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்-டது. மேலும் காங்., கட்சியினர் அமைத்த கம்பிகள், பேனர் அகற்-றப்பட்டன. ஆனால், கூட்டணி கட்சியான, தி.மு.க.,வை கண்-டித்து காங்., கட்சியினர் மறியலில் ஈடுபட்டது, அப்பகுதியில் சல-சலப்பை ஏற்படுத்தியது.