/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காங்., கட்சியினர் மறியல் போராட்டம்
/
காங்., கட்சியினர் மறியல் போராட்டம்
ADDED : டிச 17, 2024 07:22 AM
தலைவாசல்: தலைவாசலில், காங்., பேனர் கிழிக்கப்பட்டதை கண்டித்து, அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடல் நலக்குறைவால் இறந்த, காங்., மூத்த தலைவர் இளங்கோவனுக்கு தலைவாசல், மும்முடி உள்ளிட்ட இடங்களில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்திருந்தனர். இவைகளை, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதையறிந்த, சேலம்
கிழக்கு மாவட்ட காங்., தலைவர் அர்த்தனாரி, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் உள்பட, 20க்கும் மேற்பட்ட
கட்சியினர், தலைவாசல்வீரகனுார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேனர்களை கிழித்த மர்ம
நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்,
அனைவரும் கலைந்து சென்றனர்.