/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பா.ஜ.,வை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
/
பா.ஜ.,வை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 26, 2024 01:31 AM
சேலம், டிச. 26-
காங்., சேலம் மாநகர் மாவட்டம், எஸ்.சி., துறை சார்பில், மத்திய பா.ஜ., அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், முள்ளுவாடி கேட் பகுதியில் நேற்று நடந்தது. தேசிய ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த் தலைமை வகித்தார்.
கடந்த, 1927 டிச., 25ல் அம்பேத்கர், மனுஸ்மிருதியை எரித்த நாளை நினைவூட்டும்படி மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தி கண்டன முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து மனுஸ்மிருதி புத்தகத்தை எரித்தனர். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாநில பொதுச்செயலர் தினகரன், மாநகர தலைவர் அரிராமன், பெருளாளர் ராஜகணபதி, கிழக்கு மாவட்ட எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவர் பிரபாகரன், மாநில செயலர் ஷாநவாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

