தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ராகுல் கைது கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

ராகுல் கைது கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

ராகுல் கைது கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 23, 2026 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: நீட் வினாத்தாள் கசிவால், மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலககோரி புதுடில்லியில், நேற்று முன்தினம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதை கண்-டித்து, சேலம் கோட்டை ஸ்டேட் வங்கி முன்பாக, மாநகர் காங்., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் தலைவரான துணை மேயர் சாரதாதேவி தலைமை வகித்தார். மத்திய அரசை கண்டித்தும், நீட் தேர்வுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். நிர்வா-கிகள் திருமுருகன், சஞ்சய்காந்தி, பிரபு, ராஜகணபதி, வக்கீல் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* தாரமங்கலம் நகர காங்., சார்பில், பஸ் ஸ்டாண்ட் அருகே காந்-திசிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ரத்தினவேல் தலைமை வகித்தார். இதில், மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். காங்., நகர தலைவர் சண்-முகம், மாவட்ட முன்னாள் தலைவர் மணி, வட்டார தலைவர்கள் ரத்தினம், முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us