ADDED : ஜூன் 30, 2026 06:30 AM
மேட்டூர்; நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குளறுபடி உள்பட பல்வேறு முறைகேடுகளை கண்டித்து, சேலம் மேற்கு மாவட்ட காங்., சார்பில், மேட்டூர் அரசு கலை அறிவியல்
கல்லுாரி முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
வினாத்தாள் கசிவால் நீட் தேர்வு ரத்து, அரசு துறைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்வி அமைப்பின் தொடர் தோல்வி மற்றும் மத்திய அரசை கண்டித்து நேற்று மேட்டூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி முன், சேலம் மேற்கு மாவட்ட காங்., சார்பில் ஐ.என்.டி.யூ.சி., மாநில பொருளாளர் பாலசுப்ரமணி தலைமையில் ஆர்ப்-பாட்டம் நடந்தது.இடைப்பாடி நகர தலைவர் நாகராஜ், நங்கவள்ளி வட்டார தலைவர்கள் அருண்குமார், லட்சு-மணன், காடையாம்பட்டி, கொளத்துார், தாரமங்-கலம் வட்டார தலைவர்கள் ரவிகுமார், லாரன்ஸ், ரத்தினம், முத்துசாமி, லட்சுமணன், மேட்டூர் மகிளா காங்., தலைவி லட்சுமி மகேஸ்வரி
உள்பட, 50க்கும் மேற்பட்ட நிர்வாகி கள் பங்கேற்-றனர். காங்., மூத்த நிர்வாகி மால்கோ ஜெய-ராமன் நன்றி கூறினார்.
