ADDED : மார் 14, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல், அரசு பஸ் மோதி கட்டட தொழிலாளி பலியானார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தலைவாசல் அருகே வெள்ளையூர், கிழக்கு தெருவை சேர்ந்தவர் காசிலிங்கம், 52. அதே ஊரை சேர்ந்த சூர்யா, 45, அசோக், 23. கட்டட தொழிலாளிகளான இவர்கள், நேற்று வீரகனுாருக்கு வேலைக்கு சென்றனர். மதியம், 3:20 மணிக்கு, 'சைன்' பைக்கில், வெள்ளையூர் நோக்கி சென்றனர். அசோக் ஓட்டினார். வி.ராமநாதபுரம் பிரிவு சாலையில் வந்தபோது, ஆத்துாரில் இருந்து பெரம்பலுார் நோக்கி வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது.
அதில் பஸ்சின் முன்புற சக்கரத்தில் சிக்கிய அசோக், உடல் நசுங்கி உயிரிழந்தார். காசிலிங்கம், சூர்யா படுகாயமடைந்தனர். பஸ் டிரைவர், கண்டக்டர், பஸ்சை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

