/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பதற்ற ஓட்டுச்சாவடி போலீசுடன் ஆலோசனை
/
பதற்ற ஓட்டுச்சாவடி போலீசுடன் ஆலோசனை
ADDED : மார் 20, 2024 07:22 AM
ஓமலுார் : ஓமலுார் சட்டசபை தொகுதியில், 345 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதில், 32 பதற்றமானதாக கண்டறியப்பட்டது. அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணி குறித்து, ஓமலுார் சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமி தலைமையில் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று கூட்டம் நடந்தது. ஓமலுார், தாரமங்கலம், கருப்பூர், தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.
அதில் பதற்ற ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான பாதுகாப்பு, அந்தந்த பகுதிகளில் தேர்தல் தொடர்பான அனுமதி வழங்குவது குறித்து ஆலோசித்தனர்.
தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் தனியார் சுவரில் சின்னம் வரைய, கட்டட உரிமையாளரின் அனுமதி கடிதம் அவசியம்; தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்; வரவு - செலவு கணக்குகளை உரிய காலத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓட்டுச்சாவடி மண்டல அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிக்குமார், காடையாம்பட்டி தாசில்தார் ஹசின்பானு, தேர்தல் துணை தாசில்தார்கள் ஜெய்கணேஷ், கார்த்திகேயன் பங்கேற்றனர்.

