/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு அவசியம்'
/
'நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு அவசியம்'
ADDED : ஆக 01, 2024 08:02 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:
டிச., 24ல் தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, 'மின் வணிகம், டிஜிட்டல் வர்த்தகத்தின் சகாப்-தத்தில் நுகர்வோர் பாதுகாப்பு' என்ற கருப்பொருளை வைத்து கொண்டாடப்படுகிறது.
பொருட்களை வாங்கும் முன் அதன் தரம், விலை குறித்த தகவல் பெற வேண்டும். பொருள் வாங்கியதற்கான ரசீது, உத்தரவாத அட்டை, கையேடு போன்றவை உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கும்-போது விற்பனையாளரின் சேவை மையம் இருப்பதை உறுதிப்ப-டுத்தி சரியான பொருட்களை வாங்க, நமக்கான விழிப்புணர்வு அவசியம். சமூக ஊடகங்கள், மின் வணிகம் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்பு-ணர்வை கட்டாயம் மக்கள் அதிகளவில் அறிந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து உணவுப்பொருள் வழங்கல், கைத்தறி, துணி நுால், உணவு பாதுகாப்பு, கூட்டுறவு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்.