/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோடை முடியும் வரை தொடர் ரோந்து: வனத்துறையினருக்கு கலெக்டர் உத்தரவு
/
கோடை முடியும் வரை தொடர் ரோந்து: வனத்துறையினருக்கு கலெக்டர் உத்தரவு
கோடை முடியும் வரை தொடர் ரோந்து: வனத்துறையினருக்கு கலெக்டர் உத்தரவு
கோடை முடியும் வரை தொடர் ரோந்து: வனத்துறையினருக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : பிப் 16, 2024 09:43 AM
சேலம்: கோடை முடியும் வரை தொடர் ரோந்து பணியில் ஈடுபட, வனத்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, கருமந்துறை, சேர்வராயன், பாலமலை, கஞ்சமலை, ஜருகுமலை, நகரமலை, சூரியமலை, பச்சமலை, கல்வராயன்மலை, கூடமலை, காப்புக்காடுகள் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் கோடை காலங்களில் தீ விபத்து ஏற்படாதபடி வனம், வருவாய், தீயணைப்புத்துறைகள் இணைந்து, பல்வேறு பாதுகாப்பு, விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை, சுற்றுலா பயணியர் வனப்பகுதிக்குள் எடுத்துச்செல்லாமல் இருப்பதை வனத்துறையினர் உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் கோபுரம் அமைத்து தீ தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்கவும், கோடை முடியும் வரை வனத்துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபடவும் வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டால் ஏற்காட்டை சேர்ந்தவர்கள், 04281 - 222457, 94450 86386, கருமந்துறையை சேர்ந்தவர்கள், 04292 - 244803, 75503 96101 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் காட்டுத் தீ தொடர்பான தகவல்களை உடனே பெற, 0427 - 2415097, 1800 599 0427 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். கோடையில் காட்டு தீயை தடுக்க, மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள வன பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு, சுற்றுலா பயணியர், வனப்பகுதி மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.