ADDED : நவ 24, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொடர்ந்து சரியும் நீர்வரத்து
மேட்டூர், நவ. 24-
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால், கடந்த, 17ல் வினாடிக்கு, 9,154 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, 18ல், 10,449 கனஅடியாக அதிகரித்தது. பின் மழை தீவிரம் குறைந்ததால், 19ல், 9,542 கனஅடி, 20ல், 9,269 கனஅடி; 21ல், 8,355 கனஅடி; 22ல், 7,545 கனஅடி என, படிப்படியாக சரிந்த நீர்வரத்து, நேற்று வினாடிக்கு, 6,422 கனஅடியாக மேலும் சரிந்தது. அணையில் இருந்து, 1,000 கனஅடி நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டது. திறப்பை விட வரத்து கூடுதலாக இருந்ததால் நேற்று முன்தினம், 108.68 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 108.97 அடியாக சற்று உயர்ந்தது.