/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு 7 ஆண்டு பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
/
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு 7 ஆண்டு பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு 7 ஆண்டு பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு 7 ஆண்டு பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
ADDED : பிப் 20, 2025 07:30 AM
சேலம்: சேலம், மாமாங்கத்தில் உள்ள, 'செயில் ரெப்ரேக்டரி' நிறுவ-னத்தில், 400க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் உள்-ளனர். அவர்கள், கல்வித்தகுதி, பணியாற்றிய ஆண்டு, செய்யும் வேலைக்கேற்ப ஊதிய உயர்வு, 'கிரேடு' வழங்க போராடினர்.
தொடர்ந்து சேலம் மாவட்ட மேக்னசைட் பாட்டாளி தொழிற்-சங்கம், எஸ்.சி., - எஸ்.டி., தொழிற்சங்கம் இணைந்து, 2018ல், சென்னை தொழிலாளர் துறை துணை கமிஷனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதிகாரிகள் மாற்றத்தால் விசாரணைக்கு வரவில்லை.
பின், 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழிலாளர் துறை துணை தலைமை கமிஷனர், மத்திய உருக்கு அமைச்சர், இந்திய உருக்கு குழும தலைவருக்கு தனித்தனியே மனு அனுப்பினர். இதையடுத்து பலகட்ட பேச்சு நடத்தி, அதன் அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் தொழிலாளர் துணை கமிஷனர் சரவணன், சேலத்தில் கடந்த, 14, 15ல் பேச்சுவார்த்தை நடத்தினார். அதை நிறுவனமும், 4 ஒப்பந்ததாரர்களும் ஏற்று, முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், 7 ஆண்டு பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து, மேக்னசைட் பாட்டாளி தொழிற்சங்க சேலம் மாவட்ட செயலர் சதாசிவம் கூறியதாவது:
ஒப்பந்தப்படி குறைந்தது, 7 ஆண்டு பணியாற்றிய தொழிலாளர்க-ளுக்கு, அடுத்த கிரேடு எனும் பதவி உயர்வு உடனே கிடைக்கி-றது. பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புக்கு ஏற்ப தொழிலாளிக்கு பதவி உயர்வு வழங்கப்படும். ஒரு கிரேடில், 7 ஆண்டு முடித்த தொழிலாளர்களுக்கு, அடுத்த கிரேடு வழங்க, முடிவு செய்யப்பட்-டுள்ளது. அதில் நிறுவனம், ஒப்பந்ததாரர், தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி முதல்கட்டமாக, 125 தொழி-லாளிகளுக்கு தலா, 2,500 முதல், 3,500 ரூபாய் வரை சம்பள உயர்வு பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

