தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மே ஊதியம் கேட்டு ஒப்பந்த ஊழியர்் போராட்டம்

மே ஊதியம் கேட்டு ஒப்பந்த ஊழியர்் போராட்டம்

மே ஊதியம் கேட்டு ஒப்பந்த ஊழியர்் போராட்டம்


ADDED : ஜூன் 21, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்:மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கிரிஸ்டல் இன்டகிரேடட் சர்வீஸ் லிமிடெட் ஒப்பந்த நிறுவனத்தில், 83 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் பாதுகாவலர், துாய்மை, சமையல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

அவர்களுக்கு மாதந்தோறும், 6ல் ஊதியம் வழங்கப்படும். ஆனால் கடந்த மே ஊதியம், நேற்று வரை வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் நேற்று காலை, 8:00 மணி முதல், மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுகாதார பணி பாதிக்கப்பட்ட நிலையில் மதியம், 2:30 மணிக்கு மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார், மருத்துவம் மற்றும் ஊரக நல பணி இணை இயக்குனர் நந்தினி உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர். அதில் வரும், 24க்குள் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் அனைவரும் பணிக்கு திரும்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us