ADDED : ஜூன் 21, 2026 05:02 AM
ஆத்துார்:தலைவாசலை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. இவர், 2025 டிச., 25ல் அதே பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது,
கட்டட வேலை செய்த தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்,
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். தொடர்ந்து
தொழிலாளியுடன் பேசுவதை கைவிட்ட சிறுமி, 15, 16 வயதுடைய இரு
சிறுவர்களுடன் நெருக்கமாக பழகினார்.
இந்நிலையில், சிறுமி
கர்ப்பமடைந்தார். அவர் புகார்படி, ஆத்துார் மகளிர் போலீசார்
விசாரித்து, கட்டட தொழிலாளியான, கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டையை சேர்ந்த கருப்பண்ணன், 24, மற்றும் இரு சிறுவர்கள்
மீது, 'போக்சோ' வழக்கு பதிந்தனர். கடந்த மே, 22ல், கருப்பண்ணனை கைது
செய்தனர். கடந்த, 2023ல், கள்ள உறவு விவகாரத்தில்,
தேன்கனிக்கோட்டையில் முத்துமணி என்பவரை கொன்ற வழக்கிலும்,
கருப்பண்ணன் சிக்கியுள்ளது விசாரணையில் தெரிந்தது. இதனால் அவரை,
குண்டர் சட்டத்தில் அடைக்க, சேலம் கலெக்டர் இளம் பகவத், நேற்று
உத்தரவிட்டார்.
