/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2ம் நாளாக ஒப்பந்த ஊழியர் காத்திருப்பு போராட்டம் நீடிப்பு
/
2ம் நாளாக ஒப்பந்த ஊழியர் காத்திருப்பு போராட்டம் நீடிப்பு
2ம் நாளாக ஒப்பந்த ஊழியர் காத்திருப்பு போராட்டம் நீடிப்பு
2ம் நாளாக ஒப்பந்த ஊழியர் காத்திருப்பு போராட்டம் நீடிப்பு
ADDED : ஜன 22, 2026 04:41 AM
மேட்டூர்: மேட்டூரில், 840 மற்றும், 600 மெகாவாட் அனல்மின் உற்பத்தி நிலையங்களில், 80க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் பணி மேற்கொள்கின்றன. அந்த நிறுவனங்களில், 1,500க்கும் மேற்-பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் ஒரு பகுதியினர், அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் அரசு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தினர்.
தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம், 2:00 மணி முதல், குடும்-பத்துடன் அனல்மின் நிலைய நுழைவாயில் முன் அமர்ந்து
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2ம் நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது.மதியம் அனல்மின் நிலைய தலைமை பொறியாளர் ெஹலனா(பொ), ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது, 'மின் கழக தலைவர் ஒப்பந்த ஊழியர்-களின் பணி நிரந்தரம் குறித்து பேச்சு நடத்த வேண்டும்.
அதுவரை போராட்டம் நீடிக்கும்' என்றனர். இருப்பினும் தீர்வு ஏற்படாததால், ஒப்பந்த ஊழியர் போராட்டம் தொடர்ந்தது.