ADDED : மார் 17, 2024 02:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:  மேட்டூர் நகராட்சியில், நிரந்தர அடிப்படையில், 46 பேர், ஒப்பந்தப்படி, 136 பேர் என, 182 துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2ம் நாளாக நேற்று, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் மேட்டூர் நகராட்சி அலுவலகம் முன், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. கிளை செயலர் கருப்பண்ணன் தலைமை வகித்தார்.
மதியம் வரை நடந்த போராட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து அவர்கள், மேட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்தனர். அதில் ஊதிய உயர்வு வழங்க ஒப்பந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தும்படி கோரிக்கை விடுத்திருந்தனர்.

