/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆவின் பால் பாக்கெட்டுகளில் முன் தேதியிட்டு விற்பதால் சர்ச்சை
/
ஆவின் பால் பாக்கெட்டுகளில் முன் தேதியிட்டு விற்பதால் சர்ச்சை
ஆவின் பால் பாக்கெட்டுகளில் முன் தேதியிட்டு விற்பதால் சர்ச்சை
ஆவின் பால் பாக்கெட்டுகளில் முன் தேதியிட்டு விற்பதால் சர்ச்சை
ADDED : மே 03, 2024 07:00 AM
ஆத்துார் : ஆவின் பால் பாக்கெட்டுகளில் முன் தேதியிட்டு பால் வினியோகிப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்ட பகுதிகளில் நேற்று விற்பனை செய்த ஆவின் பால் பாக்கெட்டுகளில், 'மே, 3' என, தேதி குறிப்பிடப்பட்டிருந்தது.
சேலம் மாநகரில் நேற்று காலை, 10:00 மணிக்கு விற்பனைக்கு வந்த பால் பாக்கெட்டிலும், ஆத்துாரில் மதியம் வந்த பாக்கெட்டிலும், 'மே, 3' என, குறிப்பிடப்பட்டிருந்தது. முன் தேதியிட்டு ஆவின் பால் பாக்கெட் விற்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து சேலம் ஆவின் பொது மேலாளர் குமரேஸ்வரன் கூறியதாவது: சேலம் ஆவின் மூலம், 2.15 லட்சம் லிட்டர் பால், பாக்கெட்டில் விற்கப்படுகிறது. 200, 500 மி.லி., ஒரு லிட்டர் அளவில், பாக்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. ஆவின் பால் பாக்கெட்டுகளில் இன்று(நேற்று) விற்ற பாக்கெட்டுகளில் மறுநாள் தேதி குறிப்பிட்டுள்ளதில் பிரச்னை இல்லை. இந்த பாலை மறுநாள் வரை விற்பனை செய்வதற்கு வழங்கப்படுகிறது. ஆவினில் ஒரு நாள் முன் தேதியிட்டு விற்பனைக்கு வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.