/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி கேட்டை உடைத்து எடுத்துச்சென்று அ.தி.மு.க., பெயருடன் வைத்ததால் சர்ச்சை
/
பள்ளி கேட்டை உடைத்து எடுத்துச்சென்று அ.தி.மு.க., பெயருடன் வைத்ததால் சர்ச்சை
பள்ளி கேட்டை உடைத்து எடுத்துச்சென்று அ.தி.மு.க., பெயருடன் வைத்ததால் சர்ச்சை
பள்ளி கேட்டை உடைத்து எடுத்துச்சென்று அ.தி.மு.க., பெயருடன் வைத்ததால் சர்ச்சை
ADDED : ஜூலை 19, 2025 01:12 AM
அயோத்தியாப்பட்டணம், அயோத்தியாப்பட்டணம், சி.தாதனுாரில், அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அதன் நுழைவாயில் கேட்டில் புதிதாக, 'சீரங்கன் அ.தி.மு.க., செயலாளர் 1972, தங்கராஜ் அ.தி.மு.க., துணை செயலாளர் 1972' என அச்சிடப்பட்டிருந்தது. கேட்டை உடைத்து எடுத்துச்சென்று, அதில் புதிதாக தகரத்தில் அச்சிட்டு வைத்தது யார் என சர்ச்சை எழுந்தது. இதனால் அயோத்தியாப்பட்டணம் வட்டார கல்வி அலுவலர் பாரதி, அப்பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மனோன்மணி உள்ளிட்ட ஆசிரியர்களிடம் விசாரித்தார். வீராணம் போலீசாரும், பள்ளியில் விசாரித்தனர்.இதுகுறித்து பாரதி கூறியதாவது:
கடந்த மே விடுமுறையில் பள்ளி கட்டட சீரமைப்பு பணி, ஊராட்சி ஒன்றிய நிதியில் நடந்தது. அப்போது, அ.தி.மு.க.,வை சேர்ந்த நிர்வாகி ஒப்பந்தம் எடுத்து பணிபுரிந்தார். அவருடன், இந்த பகுதி நிர்வாகிகள் உதவியாக இருந்தனர். அந்த நிர்வாகிகள் கேட்டை உடைத்து எடுத்துச்சென்று, அவர்கள் பெயர், கட்சி பெயர், கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு உள்ளிட்டவற்றை அச்சிட்டு, கேட்டில் இணைத்து வைத்துள்ளனர். 2003ல் அந்த நிர்வாகிகள், நன்கொடையாக இந்த கேட்டை வழங்கியதாகவும், அப்போது பெயர் அச்சிட்டு கொடுத்த நிலையில், தற்போது மறைந்ததால் மீண்டும் புதிதாக வைத்ததாக, விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் கட்சி பெயர், கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு உள்ளிட்டவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

