/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலாளர்களை ஒருமையில் பேசிய அமைச்சரால் சர்ச்சை
/
தொழிலாளர்களை ஒருமையில் பேசிய அமைச்சரால் சர்ச்சை
ADDED : பிப் 05, 2025 07:32 AM
ஆத்துார்: 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாமில், தொழிலாளர்களை ஒருமையில் பேசிய அமைச்சரால் சர்ச்சை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே, ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, வளையமாதேவி, அம்மம்பாளையம், கல்லாநத்தம் ஆகிய கிராமங்களில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நேற்று நடந்தது. ராமநாயக்கன்பாளையத்தில் நடந்த முகாமில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேசியதாவது:
மக்களை சந்தித்து மனுக்கள் பெற்று தீர்வு காண, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகள், கூலி வேலை செய்வோர், ஆட்டோ ஓட்டுறவன், தட்டு வேலை செய்பவன், பூக்கடை, செருப்பு கடை வைத்துள்ளவன் என, அனைவருக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இன்று(நேற்று) நடந்த முகாமின்போது முதியோர், மகளிர் உரிமை உள்ளிட்ட எந்த உதவியும் வாங்கவில்லை என ஒரு பெண் கூறினார். அவருக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். அனைத்து துறைகளிலும், இந்த முகாமில் மனு அளித்து தகுதியுள்ளவர்கள் பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
அரசு விழாவில், தொழிலாளர்களை, 'அவன்' என, ஒருமையில், அமைச்சர் பேசிய வீடியோ வைரலாகி வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது.
பஸ் வசதி கேட்ட மக்கள்
அம்மம்பாளையத்தில் நடந்த முகாமில், நரிக்குறவ காலனி மக்கள், 'எங்கள் பகுதிக்கு பஸ் வசதி இல்லாததால் பள்ளி மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர்' என, அமைச்சரிடம் கூறினர். அவர், 'சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவித்து, காலை, மாலையில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.