/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செம்மண்ணுடன் பறிமுதல் லாரி விடுவிப்பால் சர்ச்சை
/
செம்மண்ணுடன் பறிமுதல் லாரி விடுவிப்பால் சர்ச்சை
ADDED : ஜூலை 09, 2025 02:08 AM
ஓமலுார்,  ஓமலுார் வருவாய்த்துறையினர், பஞ்சுகாளிப்பட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செம்மண்ணுடன் வந்த டிப்பர் லாரியை பிடித்தனர். அதேபோல் தொளசம்பட்டி அருகே  மற்றும் தாரமங்கலம், செலவடை அருகே என, 3 டிப்பர் லாரிகளை பிடித்து பறிமுதல் செய்தனர். அதில் ஒரு டிப்பர் லாரி மட்டும், நேற்று காலை, ஓமலுார் தாலுகா அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. சில மணி நேரத்தில் அந்த டிப்பர் லாரியும், அலுவலகத்தில் இருந்து வெளியேறியது.
மேலும் வருவாய்த்துறையினர், தொளசம்பட்டி ஸ்டேசனுக்கு சென்று வழக்கு பதிவு வேண்டாம் என தெரிவித்துள்ளனர். மண்ணுடன் பிடிக்கப்பட்ட லாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளது, மக்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தாசில்தார் ரவிக்குமாரிடம் கேட்டபோது, ''மண் வண்டி எதுவும் பிடிக்கப்படவில்லை,'' என்றார்.

