/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சனி, ஞாயிறில் வரி வசூல் மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
/
சனி, ஞாயிறில் வரி வசூல் மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
சனி, ஞாயிறில் வரி வசூல் மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
சனி, ஞாயிறில் வரி வசூல் மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
ADDED : மே 03, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம் மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் உள்ள கணினி சேவை மையங்கள், வரி வசூலிப்புக்கு சனி, ஞாயிறில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் அறிக்கை:மாநகராட்சியில், 2025 - 26ம் ஆண்டின் முதல் அரையாண்டு நிலுவை மற்றும் நடப்பாண்டு சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, குத்தகை, பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களை செலுத்த வசதியாக, மண்டல அலுவலகங்களில் உள்ள கணினி சேவை மையங்கள், சனி, ஞாயிறில் செயல்படும். மக்கள் சிரமமின்றி
வரியை செலுத்தி, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.