/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கு மாநகராட்சி ஊழியருக்கு '3 ஆண்டு'
/
ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கு மாநகராட்சி ஊழியருக்கு '3 ஆண்டு'
ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கு மாநகராட்சி ஊழியருக்கு '3 ஆண்டு'
ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கு மாநகராட்சி ஊழியருக்கு '3 ஆண்டு'
ADDED : ஆக 01, 2025 01:35 AM
சேலம், சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில், மலேரியா பிரிவு கள உதவியாளராக இருந்தவர் தேவராஜன், 55. இவர், 2011ல், அதே பிரிவில் பணியாற்றிய தயாளனிடம் இருந்து, மாதந்தோறும், 500 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். அதை தர விரும்பாத தயாளன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
தொடர்ந்து அவர்கள் அறிவுறுத்தல்படி, 2011 ஜனவரியில், 1,000 ரூபாய் லஞ்சமாக தந்தபோது, மறைந்திருந்த போலீசார், தேவராஜனை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் தேவராஜனுக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி கமலக்கண்ணன் நேற்று உத்தரவிட்டார்.