/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாறை உடைப்பதற்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
/
பாறை உடைப்பதற்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 01, 2025 01:36 AM
பனமரத்துப்பட்டி, இ.கம்யூ., சார்பில், பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய குழு குமார் தலைமை வகித்தார். அதில் பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் சொந்த வீடு இல்லாத மக்களுக்கு, ஒரு சென்ட் வீட்டுமனை நிலம் வழங்குதல்; 'மின்னல்' வேகத்தில் பறக்கும் அரளி பூ ஏற்றிய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்தல்;
சந்தியூர் ஆட்டையாம்பட்டி கரட்டில், 24 மணி நேரமும் பாறை உடைப்பதால் வீடுகளில் அதிர்வு, காற்று மாசு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் பாறை உடைக்க தடை விதித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஒன்றிய செயலர் செவந்தியப்பன், முன்னாள் செயலர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.