ADDED : ஆக 01, 2025 01:36 AM
சேலம், சேலம் அரசு கலைக்கல்லுாரியில், அதன் உள்ளக புகார் குழு சார்பில், மாணவியருக்கு பாலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம், நேற்று நடந்தது. முதல்வர் கலைச்செல்வி தொடங்கி வைத்தார்.
சேலம் அரசு மருத்துவமனை உதவி பேராசிரியர் அபிராமி, பெண்கள் மனநலம் மேம்படுத்துவதற்கான வழிமுறை, பாலியல் விழிப்புணர்வு குறித்து பேசினார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரேமலதா, உள்ளக புகார் குழு உறுப்பினர் ஜெயலட்சுமி, மாணவியர் பங்கேற்றனர்.
சட்ட விழிப்புணர்வு
ஆத்துார் வட்ட சட்டப்பணி குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு, மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் நேற்று நடந்தது.
மாவட்ட கூடுதல் நீதிபதி ரவிச்சந்திரன், சார்பு நீதிபதி கணேசன், மாணவ, மாணவியருக்கு, சட்டம் சார்ந்த விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தனர். முதல்வர் விக்டோரியா தங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

