ADDED : நவ 25, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த, சேலம் மாநகராட்சி இயல்பு கூட்டம், நவ., 28க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில், நவம்பர் மாதத்துக்கான இயல்பு கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சேலம் மாவட்டத்தில், பொது தணிக்கைக்குழு இன்று ஆய்வு செய்யும் நிலையில், நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி கூட்டம், நவ., 28, வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக, கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டு, கூட்டம் ஒத்தி வைக்கப்படுவது இது, 7வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

