/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரியில் மரங்கள் வேரோடு சாய்ப்புமாநகராட்சி அதிகாரிகள் விசாரணை
/
ஏரியில் மரங்கள் வேரோடு சாய்ப்புமாநகராட்சி அதிகாரிகள் விசாரணை
ஏரியில் மரங்கள் வேரோடு சாய்ப்புமாநகராட்சி அதிகாரிகள் விசாரணை
ஏரியில் மரங்கள் வேரோடு சாய்ப்புமாநகராட்சி அதிகாரிகள் விசாரணை
ADDED : ஏப் 20, 2025 02:10 AM
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள மரங்கள், பொக்லைன் மூலம் வேரோடு சாய்க்கப்பட்டது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்தனர்.
சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி, 2,137 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தண்ணீரின்றி வறண்ட ஏரியில், சீமை கருவேல மரங்கள், பல்வேறு வகையான பலன் தரும் மரங்களும் உள்ளன. அங்கு நேற்று பொக்லைன் வண்டியை கொண்டு சென்று, சித்தன் கோவில் செல்லும் வழியில் உயிரோடு இருந்த வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகை மரங்களை, வேரோடு பிடுங்கினர். இதுகுறித்து, பா.ம.க.,வின் மாநில வக்கீல் பிரிவு துணை செயலர் குமார் உள்ளிட்டோர், சேலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மரங்கள் பிடுங்குவதையும், கடத்திச்செல்வதையும் தடுத்து நிறுத்தினர்.
மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் தினேஷ்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், வேரோடு சாய்க்கப்பட்ட மரங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து உதவி பொறியாளர் தினேஷ்ராஜ் புகார்படி, பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஏரி நிலத்தை அளவீடு செய்து வேலி போடப்பட்டுள்ளது. வேலியை தாண்டி வந்து மரங்களை பிடுங்கியுள்ளனர். அவர்கள் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

