/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உதயநிதி பங்கேற்ற விழாவுக்கு ரூ.18 லட்சம் மாநகராட்சி செலவு
/
உதயநிதி பங்கேற்ற விழாவுக்கு ரூ.18 லட்சம் மாநகராட்சி செலவு
உதயநிதி பங்கேற்ற விழாவுக்கு ரூ.18 லட்சம் மாநகராட்சி செலவு
உதயநிதி பங்கேற்ற விழாவுக்கு ரூ.18 லட்சம் மாநகராட்சி செலவு
ADDED : நவ 28, 2024 02:43 AM
சேலம்:துணை முதல்வர் உதயநிதி, கடந்த அக்., 20ல் சேலம் வந்தார். அவரது தலைமையில் சேலம் மாநகராட்சியின் நேரு விளையாட்டு அரங்கில், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
அதில் மாநகராட்சி சார்பிலும் சில நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு, சேலம் மாநகராட்சி சார்பில், 18 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஒலி, ஒளி, மற்றும் இதர முன்னேற்பாடு பணிகள், நிகழ்ச்சி நடந்த இடத்தின் முகப்பு பகுதியில் செயற்கை புல் தரை, எல்.இ.டி., டிவி, பிளக்ஸ், வழிகாட்டும் பலகை, ஷாமியானா பந்தல் ஆகியவற்றை வாடகைக்கு பொருத்தப்பட்டன.
விளையாட்டு துறை சார்பில் நடந்த விழாவுக்கு மாநகராட்சி சார்பில், 18 லட்சம் ரூபாய் செலவு செய்தது, சர்ச்சையை எழுப்பியுள்ளது. எதிர்கட்சி கவுன்சிலர்கள் இது குறித்து நேற்று காரசாரமாக விவாதித்தனர்.