/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.11 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
/
ரூ.11 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
ADDED : ஜூன் 24, 2025 01:14 AM
ஆத்துார், ஆத்துார் வேளாண் கூட்டுறவு சங்கத்தில், 11 லட்சம் ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடந்தது.
ஆத்துார் வேளாண் கூட்டுறவு சங்கத்தில், வாரந்தோறும் பருத்தி, மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் பகுதிகளில் இருந்து, 181.60 குவிண்டால் பருத்தி விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், பருத்தி தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர். பி.டி., ரகம் பருத்தி குவிண்டால், 7,089 முதல், 8,019 ரூபாய்; டி.சி.ெஹச்., ரகம் குவிண்டால், 9,269 முதல், 10 ஆயிரத்து, 289 ரூபாய்; கொட்டு பருத்தி குவிண்டால், 3,589 முதல், 4,589 ரூபாய் என, விற்பனையானது. 181.60 குவிண்டால் பருத்தி, 11 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.