/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.38.74 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
/
ரூ.38.74 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
ADDED : ஆக 22, 2025 01:24 AM
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரத்தில், ரூ.38.74 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் நேற்று முன்தினம் நடந்த பருத்தி ஏலத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் 60 கிலோ எடைகொண்ட, 1,467 மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில், சுரபி ரகம் குவிண்டாலுக்கு, ரூ.8,001 முதல், 10,555 வரையிலும், பி.டி.ரகம் ரூ.6,900 முதல் 8,150 வரையிலும், கொட்டு பருத்தி ரூ.4,200 முதல், 6,900 வரையிலும் என மொத்தம் ரூ.38.74 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.
* ஆர்.கவுண்டம்பாளையத்தில் உள்ள ஆர்.சி.எம்.எஸ்., கிடங்கில், 109 பருத்தி மூட்டை விற்பனைக்கு வந்திருந்தது. ஆர்.சி.எச். ரகம் குறைந்தபட்சமாக குவிண்டால், 6,719 ரூபாய், அதிகபட்சமாக, 7,900 ரூபாய்க்கு விற்பனையானது. கொட்டு ரகம், 4,009 லிருந்து, 4,500 ரூபாய் வரை விற்றது. ஆர்.சி.எச்., ரகம், 106 மூட்டை, கொட்டு ரகம், 3 மூட்டை என, 109 மூட்டை, 2.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.