/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.60 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
/
ரூ.60 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
ADDED : மார் 18, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.60 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
ஆத்துார்:ஆத்துார், புதுப்பேட்டை வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 988.73 குவிண்டால்(ஒரு குவிண்டால், 100 கிலோ) பருத்தியை கொண்டு வந்தனர். 18 வியாபாரிகள், தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயித்தனர். குவிண்டால் பி.டி., ரகம், 6,389 முதல், 7,799 ரூபாய்; டி.சி.ெஹச்., ரகம், 8,683 முதல், 10,109 ரூபாய்; கொட்டு ரகம், 3,589 முதல், 5,499 ரூபாய்க்கு விலைபோனது. 988.73 குவிண்டால் மூலம், 60 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இரு வாரமாகவே பருத்தி விலையில் மாற்றம் இல்லை.

