/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தம்பதியை தாக்கி 7 பவுன் நகை பறிப்பு; ரவுடி உட்பட மூவர் கைது
/
தம்பதியை தாக்கி 7 பவுன் நகை பறிப்பு; ரவுடி உட்பட மூவர் கைது
தம்பதியை தாக்கி 7 பவுன் நகை பறிப்பு; ரவுடி உட்பட மூவர் கைது
தம்பதியை தாக்கி 7 பவுன் நகை பறிப்பு; ரவுடி உட்பட மூவர் கைது
ADDED : ஏப் 22, 2025 01:59 AM
சேலம்:
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் மாதவராஜ், 75. இவரது மனைவி பிரேமா, 67. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், மாதவராஜ், பிரேமா தனியாக வசித்து வருகின்றனர். கடந்த, 18 மதியம் 3:00 மணிக்கு இவரது வீட்டிற்கு வந்த இருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். அவர்கள் தண்ணீர் தர மறுத்தனர்.
இந்நிலையில் இரு வாலிபர்களும், பக்கத்து வீட்டு மாடி படியில் ஏறி மாதவராஜ் வீட்டிற்குள் நுழைந்து, மாதவராஜை தாக்கி விட்டு பிரேமாவின் கழுத்தில் இருந்த, 7 பவுன் நகையை பறித்து கொண்டு, அவர்களது கையில் இருந்த இரண்டு மொபைல்போனையும் பறித்து சென்று தப்பினர்.
கிச்சிப்பாளையம் போலீசார் அப்பகுதியில் பதிவாகியிருந்த, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர், அதில், சேலம் டவுன் முகமது புறா பகுதியை சேர்ந்த முஸ்தபா, 34, இம்ரான், 34, ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இருவரையும் கடந்த, 19ல், கைது செய்து விசாரணை நடத்தியதில் இருவர் மீதும் கொலை வழக்கு உள்ளதும், பிரபல ரவுடியான முஸ்தபா, தனது வழக்கு செலவிற்காக, 7 பவுன் நகை திருடியதும், நகையை அவரது தாயார் முஸ்திரி ஜானிடம் கொடுத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தாயார் முஸ்திரி ஜானையும் கைது செய்து அவரிடம் இருந்து 7 பவுன் நகை, இரண்டு மொபைல்போன்
பறிமுதல் செய்யப்பட்டன.