/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் தம்பதி பலி; பஸ் டிரைவர் கைது
/
விபத்தில் தம்பதி பலி; பஸ் டிரைவர் கைது
ADDED : அக் 09, 2024 06:38 AM
மகுடஞ்சாவடி: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, பட்டிலுார், போயர் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் 35. நுால் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்தார். இவரது மனைவி லஷ்மி, 27. இருவரும் நேற்று முன்தினம், 'ஆக்சஸ்' மொபட்டில் வெப்படையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இரவு, 7:00 மணிக்கு, சேலம் கோவை பைபாஸ் சாலையில் மகுடஞ்சாவடி அருகே காளிகவுண்டம்பாளையத்தில் வந்தபோது ஈரோட்டில் இருந்து சேலம் வந்து கொண்டிருந்த டி.டி.எஸ்., பஸ், மொபட் பின்புறம் மோதியது. இதில் தம்பதி துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மகுடஞ்சாவடி போலீசார், தனியார் பஸ்சை பறிமுதல் செய்தனர். விபத்து ஏற்படுத்திய, பவானியை சேர்ந்த, பஸ் டிரைவர் வெங்கடேஷ், 28, என்பவரை கைது செய்தனர்.