/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கட்டட பொருட்களை வாடகைக்கு எடுத்து தம்பதி மோசடி
/
கட்டட பொருட்களை வாடகைக்கு எடுத்து தம்பதி மோசடி
ADDED : டிச 26, 2024 02:40 AM
சேலம்: சேலம், அழகாபுரம், பாலாஜி நகரை சேர்ந்தவர் நந்தகோபால், 42. கட்டடங்களுக்கு சென்ட்ரிங் வேலை செய்யும் இவர், அதற்கான பொருட்களை வாடகைக்கும் விடுகிறார். ஓமலுாரை சேர்ந்த கட்-டட தொழிலாளி முருகேசன், 45, அவரது மனைவி இந்திராணி, 37. இவர்கள், நந்தகோபாலிடம், கட்டட பொருட்களை வாட-கைக்கு எடுத்து சென்று வந்தனர்.
கடந்த ஜனவரியில் தம்பதியர், பல இடங்களில் சென்ட்ரிங் வேலை செய்து வருவதாகவும், மாத வாடகைக்கு பொருட்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். அதை நம்பிய நந்த-கோபால், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்களை வாட-கைக்கு கொடுத்துள்ளார். ஆனால் பல மாதங்களாகியும் வாட-கையும் தராமல், பொருட்களையும் திருப்பி தராமல் ஏமாற்றியுள்-ளனர். இதுகுறித்து நந்தகோபால் புகார்படி, அழகாபுரம் போலீசார், முருகேசன், இந்தி-ராணி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

