/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேசிய வாள் சண்டைக்கு நீதிமன்ற பணியாளர் தேர்வு
/
தேசிய வாள் சண்டைக்கு நீதிமன்ற பணியாளர் தேர்வு
ADDED : நவ 28, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: சேலத்தை சேர்ந்தவர் மெய்யப்பன், 25. இவர், சங்ககிரி சார்பு நீதி-மன்றத்தில், இளநிலை கட்டளை நிறைவேற்றுனராக பணிபுரி-கிறார். இவர், கடந்த, 18ல் சேலத்தில் நடந்த, வாள் சண்டை போட்டியில் முதலிடம் பிடித்தார். இதனால் கோவையில், 25ல் நடந்த, மாநில போட்டியில் பங்கேற்றார். அதிலும், 2ம் இடம் பிடித்தார். இதனால் கேரள மாநிலம் கண்ணுாரில், டிச., 31 முதல், ஜன., 2 வரை நடக்க உள்ள தேசிய போட்டிக்கு தேர்வானார். மேலும் கோவையில் வெற்றி பெற்ற பதக்கம், சான்றிதழ்களை, சங்ககிரி சார்பு நீதிமன்ற நீதிபதி
பன்னீர்செல்வத்திடம் காட்டி வாழ்த்து பெற்றார். அவரை, சங்ககிரி நீதிமன்ற பணியாளர்களும் பாராட்டினர்.