சேலம்: தென் மேற்கு பருவமழை தாக்கத்தால் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு இடியுடன் கூடிய சாரல் மழை பெய்தது. பிறகு கனமழையாக மாறி ஆங்காங்கே விட்டு-விட்டு பெய்த நிலையில் நள்ளிரவை கடந்தும், மிதமான அளவில் மழை நீடித்தது. அதிகபட்சமாக டேனிஷ்பேட்டையில் 43 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
நத்தக்கரை, 37, ஏற்காடு, 28, சங்ககிரி, 20, இடைப்பாடி, 17, ஏத்தாப்பூர், 15, ஆத்துார், வீரகனுார் தலா, 14, சேலம், 13.5, வாழப்பாடி, கெங்கவல்லி தலா, 13, தம்மம்பட்டி, 8, கரிய-கோவில், 6, மேட்டூர், 5.2, ஓமலுார், ஆணைமடுவு தலா, 5 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.தலைவாசலில் கடந்த, 4ல் இடியுடன் மழை கொட்டியது. அப்-போது, சிறுவாச்சூர் தெற்கில், விவசாயி கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமான பசுமாடு, இடி தாக்கியதில் இறந்தது. அதற்கு இழப்-பீடாக, 37,500 ரூபாய், விவசாயி வங்கி கணக்கில் இன்று வரவு வைக்கப்படும் என தாசில்தார் பாலாஜி தெரிவித்தார்.