ADDED : டிச 04, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: தலைவாசல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால், தலைவாசல், வீரகனுார், காட்டுக்கோட்டை, சிறுவாச்சூர் பகுதிகளில் சாகுபடி செய்துள்ள மரவள்ளி, மக்காச்சோளம், வாழை, மஞ்சள், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் மூழ்கின.
குறிப்பாக மக்காச்சோளம், மரவள்ளி முறிந்து விழுந்து அதிகளவில் சேதமடைந்துள்ளது. இதனால் பயிர் சேதங்கள் குறித்து தலைவாசல் தாசில்தார் பாலாஜி தலைமையில் வருவாய்த்துறையினர், வேளாண் அலுவலர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.