ADDED : ஜூலை 03, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் அறிக்கை:
மாவட்டத்தில் காரீப் - 2025 பருவத்தில் பச்சைப்பயிறு, தட்டைப்பயிறுக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு கடந்த ஜூலை, 1 வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அதற்கான அவகாசம், 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 6 வரை, காப்பீடுக்கு, 2 சதவீத பிரிமீயத்தொகை, 336 ரூபாய் செலுத்தி, இடர்பாடு ஏற்படும் பட்சத்தில், காப்பீடு தொகை பெற்று பயன்பெறலாம். விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். அத்துடன் மொபைலில் உழவர் செயலி மூலமும் முழு விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.