/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புயலால் பயிர்கள் சேதம்: இழப்பீடு வழங்க கோரிக்கை
/
புயலால் பயிர்கள் சேதம்: இழப்பீடு வழங்க கோரிக்கை
ADDED : டிச 08, 2024 12:57 AM
புயலால் பயிர்கள் சேதம்: இழப்பீடு வழங்க கோரிக்கை
ஆத்துார், டிச. 8-
புயலால் சேலம் மாவட்டத்தில் மரவள்ளி, மக்காச்சோளம் பயிர்கள் சேதமடைந்ததால், ஆய்வு செய்து இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்டம் ஆத்துாரில் நேற்று, ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் சங்கரய்யா கூறியதாவது:
கடந்த நவ., 30 முதல், டிச., 1ல், 'பெஞ்சல்' புயல், பருவ மழையால் சேலம் மாவட்டத்தில் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, ஏற்காடு தாலுகா பகுதிகளில், சாகுபடி செய்துள்ள மரவள்ளி, மக்காச்சோளம், நெல், காய்கறி உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சேதமாகியுள்ளன.
அதன் மதிப்பு குறித்து வேளாண், தோட்டக்கலை, வருவாய்த்துறையினர் கள ஆய்வு செய்து, ஏக்கருக்கு, 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக முதல்வர், வேளாண் அமைச்சர், சேலம் கலெக்டர் உள்ளிட்டோருக்கும் மனுக்கள் அனுப்பியுள்ளோம். தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.