/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாக்கு விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் வேதனை
/
பாக்கு விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் வேதனை
ADDED : நவ 09, 2024 03:47 AM
ஆத்துார்: கோடை வெயில் தாக்கத்தால் பாக்கு விளைச்சல் பாதிக்கப்பட்-டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார், நரசிங்கபுரம், தாண்டவராயபுரம், சொக்கநாதபுரம், தலைவாசல், தம்மம்பட்டி, கெங்கவல்லி, பெத்-தநாயக்கன்பாளையம், கருமந்துறை, வாழப்பாடி சுற்றுவடட்டார பகுதிகளில் பாக்கு சாகுபடி செய்யப்படுகிறது. அந்த பாக்குகளை அறுவடை செய்து, 'ஆப்பி' எனும் கொட்டை பாக்கு உற்பத்தி செய்கின்றனர். ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, பாக்கு காய்களை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். நடப்-பாண்டில் மரங்களில் பாக்கு விளைச்சல் மட்டுமின்றி விலையும் குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து சொக்கநாதபுரம் விவசாயி ஜெயராமன் கூறியதா-வது:
ஏக்கருக்கு, 750 முதல், 800 பாக்கு மரங்கள் உள்ளன. மரத்-துக்கு தலா, 5, 6 குலைகள் வீதம் காய்கள் பிடித்தால் ஏக்கருக்கு, 8 முதல், 10 டன் வரை மகசூல் இருக்கும். எப்போதும் இல்லாத-படி கோடை காலத்தில் அதிகளவில் வெயில் இருந்ததால் நீர் பாசனம் செய்தபோது, 3 குலைகள் வரை காய்ந்துவிட்டன. பாக்கு காய்களும், 'ஈச்சங்காய்' அளவு சுருங்கிவிட்டது. வெயில் தாக்கத்தால், ஒரு டன் கூட மகசூல் இல்லை. 20 சதவீதம் வரை மரங்கள் வெடிப்பு ஏற்பட்டும் இறந்துவிட்டன. இதுகுறித்து வரு-வாய்த்துறையினர் ஆய்வு செய்தும் இழப்பீடு வழங்கவில்லை. கடந்தாண்டு கிலோ, 60 ரூபாய் வரை விற்ற பாக்கு காய்கள், இந்-தாண்டு, 40 முதல், 50 ரூபாய் மட்டும் விற்கப்படுவதோடு விளைச்சலும் இல்லாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.