/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடும் வெயில் தாக்கத்தால் வெள்ளரிகாய்களுக்கு மவுசு
/
கடும் வெயில் தாக்கத்தால் வெள்ளரிகாய்களுக்கு மவுசு
ADDED : ஏப் 25, 2025 01:42 AM
பஞ்சபள்ளி:
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், தர்மபுரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் வெள்ளரி காய்களுக்கு, வெளி மாவட்டங்களில் மவுசு அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், மாரண்டஹள்ளி, பஞ்சபள்ளி, சுற்றுவட்டாரத்தில் தக்காளி, காலிபிளவர், கத்தரிக்காய், வெண்டை, வெள்ளரி உள்ளிடவை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில், நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மற்றும் அதிக மழைப்பொழிவால், இங்கு விளைவிக்கப்படும் வெள்ளரிகாய்கள் சுவை மிக்கதாக காணப்படுகிறது.
இதில், ஈரோடு, கோவை, பெங்களூரு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வெள்ளரி பிஞ்சுகளை அதிகம் வாங்கி செல்கின்றனர். பெங்களூருவிலுள்ள தினசரி சந்தைக்கு பஞ்சப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேரடியாக வெள்ளரியை கொண்டு செல்கின்றனர். அங்கு வெள்ளரி காய்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
இது குறித்து, பஞ்சபள்ளியை சேர்ந்த விவசாயி ஒருவர்  கூறுகையில், 'வெள்ளரி காய்கள், 40 நாட்களில் விளையும். இவை பெங்களூரு சந்தையில், 50 கிலோ எடை கொண்ட மூட்டைகள், 600 ரூபாய் என விற்பனையாகிறது. ஒரு ஏக்கர் வெள்ளரி சாகுபடி செய்ய, 30,000 ரூபாய் வரை செலவாகிறது.
இதில், ஏக்கருக்கு, 5 டன் வரை மகசூல் கிடைக்கிறது. எனவே, இது எங்களுக்கு ஓரளவுக்கு லாபகரமான பயிராக உள்ளது' என்றார்.

