/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் கலாசார கலை விழா கொண்டாட்டம்
/
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் கலாசார கலை விழா கொண்டாட்டம்
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் கலாசார கலை விழா கொண்டாட்டம்
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் கலாசார கலை விழா கொண்டாட்டம்
ADDED : மே 05, 2024 01:51 AM
சேலம்:சேலம்,
சீரகாபாடி விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் ஆண்டு விழா, கலாசார கலைவிழா, துறையின்
மாணவ பேரவை அமைப்பு, நுண்கலை அமைப்பு மூலம் கொண்டாடப்பட்டது.
ஆண்டு
விழாவுக்கு துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து
வரவேற்றதோடு, கல்லுாரி ஆண்டறிக்கையை வாசித்தார். பல்கலை சார்பு
துணை வேந்தர் சபரிநாதன், பல்கலை தர கட்டுப்பாடு இயக்குனர்
ஞானசேகர், மாணவி நல இயக்குனர் சண்முகசுந்தரம் பேசினர்.
தொடர்ந்து
துறை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களில் கல்வியில் சிறந்து விளங்கி
அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சான்றிதழ், நினைவு பரிசு
வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களுக்கு கலாசார கலை விழா
கொண்டாடப்பட்டது. 'டிவி' நடிகர்கள் பாலா, விக்னேஷ் பங்கேற்றனர்.
அதில்
மாணவர்களின் பன்முக திறமையை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கலை
போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு
சான்றிதழ்கள், கோப்பை வழங்கப்பட்டன. மேலும் அனைத்து போட்டிகளிலும்
வெற்றி பெற்ற அணிக்கு ஒட்டு மொத்த சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இதற்கான
ஏற்பாட்டை, நுண்கலை அமைப்பின் உறுப்பினர்கள், மாணவ பேரவை
உறுப்பினர்கள், துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.