தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'வளை' ஓசை ஒலித்தது; அம்மன் ஜொலித்தது

'வளை' ஓசை ஒலித்தது; அம்மன் ஜொலித்தது

'வளை' ஓசை ஒலித்தது; அம்மன் ஜொலித்தது


ADDED : ஆக 15, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 05:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்;ஆடி என்றாலே அம்மனுக்கு உகந்தது. அந்த மாத பூரம் நட்சத்திர நாளில், மக்களை காக்க உமா-தேவி சக்தியாக அவதரித்த நாள் என்றும், வைணவ கோவிலில் தேவி ஆண்டாளாக அவத-ரித்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது. தவிர அந்த மாதத்தின் கடைசி வெள்ளியான நேற்று, சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் பெரு-மாளுக்கும், ஆண்டாளுக்கும், சிறப்பு அபி ேஷகம், அலங்காரம், ஆராதனைகள் நடந்தன. உற்சவர் ஆண்டாளுக்கு சர்வ அலங்காரம் செய்-யப்பட்டு திருவீதி உலா வந்தார். மாலையில் அழகிரிநாதருடன், ஆண்டாள் நாச்சியார், மாலை மாற்றும் உற்சவம் நடந்தது.

கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, தங்க கவசம் சாத்தப்பட்டு வளையல்-களால் அலங்காரம் செய்யப்பட்டு, அம்மன் காட்-சியளித்தார். ஏராளமான பக்தர்கள், காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்-கப்பட்டது.அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் மூலவ-ருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மலர்கள் சாற்றி, வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அங்கு வந்த பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டன. நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலில் லட்சத்துக்கும் மேற்பட்ட வளையல்களால் அலங்காரம் செய்-யப்பட்டது.

ஆத்துார், கைலாசநாதர் கோவிலில் உள்ள ஆதிப-ராசக்தி அம்மனுக்கு, 55ம் ஆண்டு வளைகாப்பு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான வளையல்கள் அணிவித்து, புஷ்ப அலங்காரத்தில் அருள்பா-லித்தார். பின், அந்த வளையல்கள், பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. முன்னதாக, 108 சங்காபிேஷக பூஜை நடந்தது. அதேபோல் ஆத்துார் பெரிய மாரியம்மன், விநாயகபுரம் சமயபுரத்து மாரி-யம்மன் உள்ளிட்ட கோவில்களில் வளையல் அணிவித்து பூஜை நடந்தது.

ஆணி காலணியில் நின்று வாக்கு

கெங்கவல்லி அங்காள பரமேஸ்வரி கோவிலில்,

வளையல்கள் அணிவித்து, வண்ண மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். மஞ்சள், குங்-குமம், தாலி கயிறு, பழ வகைகள், இனிப்பு வகைகள் படையல் வைத்து, பக்தர்கள் வழிபட்-டனர். ஆணையாம்பட்டி மாசி பெரியசாமி கோவிலில் உள்ள பொன்னாளி அம்மனுக்கு ஆயிரக்கணக்கான வளையல் அணிவித்து பூஜை செய்யப்பட்டது. இதில் பூசாரி, ஆணி கால-ணியில் நின்று அருள்வாக்கு கூறினார். குழந்தை இல்லாதவர்களுக்கு எலுமிச்சை பழம், திருநீறு வழங்கி ஆசீர்வாதம்

செய்யப்பட்டது.

பால்குட ஊர்வலம்

உலக நன்மை, மழை வேண்டி, ஆத்துார், கோட்டை காய நிர்மலேஸ்வரர் கோவிலில் திரு-விளக்கு பூஜை நடந்தது. 200 சுமங்கலி பெண்கள், விளக்கு ஏற்றி வழிபட்டனர். பெரியநாயகி அம்மன், வளையல், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். தம்மம்பட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. 550 சுமங்கலி பெண்கள், விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

ஆத்துார், பழைய உடையம்பட்டி மகா சக்தி மாரி-யம்மன் கோவிலில், விநாயகருக்கு கணபதி ேஹாமம், அம்மனுக்கு அபி ேஷக பூஜை நடந்-தது. தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட பெண்கள், பால் குடம் எடுத்து, நரசிங்கபுரம், பழைய உடை-யம்பட்டியில் உள்ள முக்கிய வீதிகள் வழியே, 'ஓம்சக்தி, பராசக்தி' கோஷம் எழுப்பியபடி ஊர்வ-லமாக சென்று, மகாசக்தி மாரியம்மன் மீது ஊற்றி வழிபட்டனர். பின் அம்மனுக்கு வளையல் அணிவித்தனர்.

இடைப்பாடி, செல்லியாண்டி அம்மன் கோவிலில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து, தோப்பூர் வழியே ஊர்வலமாக, கவுண்டம்பட்டி பருவதராஜகுல சமுதாயத்தின் மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு பாலை, மாரி-யம்மன் சுவாமிக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். பின் தங்க கவசத்தில் அம்மன் அருள்பாலித்தார். இடைப்பாடி, தாவாந்தெரு காளியம்மன் கோவிலில், 1,008 சங்கு அபிஷேகம் நடந்தது. சங்-ககிரி வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் சுவா-மிக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.

தாரமங்கலம் சக்தி மாரியம்மன் கோவிலில் ஆப்பிள், மாதுளை, திராட்சை, நெல்லி, ஆரஞ்சு, வாழை உள்ளிட்ட பழ வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 1,00,008 வளையல் அலங்காரத்தில், ஓமலுார் கடைவீதியில் உள்ள பெரிய மாரியம்மன் அருள்-பாலித்தார். முன்னதாக திரளான பெண்கள், கூழ் பூஜை நடத்தினர். மூலவர், உற்சவர் அம்ம-னுக்கு சாற்றப்பட்ட வளையல்கள் மற்றும் மாங்-கல்ய கயிறு, குங்குமம் ஆகியவை பிரசாதமாக பக்தர்

களுக்கு வழங்கப்பட்டது. ஓமலுார் ரேஷன் கடை எதிரே உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us