நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 13வது வார்டு கோம்பைக்-காடு மற்றும் 1வது வார்டு ஜருகுமலை அடிவாரத்தில் உள்ளன. மழைக்காலங்களில் மலையில் உற்பத்தியாகும் தண்ணீர், 13வது வார்டு வழியே சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஏரியை சென்ற-டையும். ஆனால் மழைநீர் வழித்தடங்கள் பராமரிப்பு செய்யப்ப-டாமல் உள்ளதால் அழிந்து வருகின்றன.
இதனால் வெள்ளம், பயிரிடப்படும் வயலில் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகின்றது. நீர்வரத்து குறைந்ததால், சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஏரி வறண்டுள்ளது. இதனால் ஜருகுமலை ஓடையில் தடுப்பணை கட்-டவும், மழைநீர் ஓடையை கண்டுபிடித்து துார்வாரவும், மக்கள் வலியுறுத்தினர்.

