ADDED : மே 14, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம் :ராசிபுரம் யூனியன், போடிநாயக்கன்பட்டியில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெருமாள் கோவில் தெருவில் மின் கம்பம் உள்ளது. தெருவிளக்கும் இதில் தான் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த மின்கம்பத்தின் கீழ் பகுதி கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வருகிறது. தற்போது, மின் கம்பத்தின் கம்பி, ஜல்லிகற்கள் வெளியே தெரியும் அளவிற்கு உடைந்து விட்டது. பலமாக காற்றடிக்கும் போது, மின் கம்பிகளுடன் சேர்ந்து கம்பமும் ஆடுகிறது. இப்பகுதியில் கோவில் இருப்பதால் குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும்.
காற்றுக்கு மின் கம்பம் ஆடும்போது கீழே விழுந்து விடுமோ என, பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே, கோவில் அருகே சேதமடைந்துள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

