ADDED : ஜூன் 08, 2024 02:48 AM
சேலம்: சேலத்தில், நேற்று முன்தினம் மாலை பரவலமாக மழை பெய்தது. அதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே விட்டுவிட்டு பெய்த மழை, நள்ளிரவு வரை சாரல் மழையாக நீடித்தது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சங்ககிரியில், 50.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தம்மம்பட்டி, 53, வீரகனுார், 39, ஓமலுார், 23, சேலம், ஆணைமடுவு பகுதியில் தலா, 16, டேனிஷ்பேட்டை, 11, கெங்கவல்லி, 10, ஆத்துார், 10.2, நத்தக்கரை, 7, ஏற்காடு, இடைப்பாடி, ஏத்தாப்பூர் தலா, 4, மேட்டூர், 2.2, வாழப்பாடி, 2 மி.மீ., மழை
பெய்துள்ளது.
* வாழப்பாடி, காரிப்பட்டி, மேட்டுபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில்
நேற்று மாலை, 6:20 மணியளவில் கரு மேகங்கள் சூழ்ந்து, விட்டுவிட்டு அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.