/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3 மாதங்களுக்கு பின் ஏற்காட்டில் 'அடடா' மழை
/
3 மாதங்களுக்கு பின் ஏற்காட்டில் 'அடடா' மழை
ADDED : மே 03, 2024 07:00 AM
ஏற்காடு : சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகம் உள்ளது.
இதனால் ஏற்காட்டிலும் குளிர்ந்த சூழல் மாறி, வெயில் தாக்கமே உள்ளது. இதனால் அங்குள்ள வனப்பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு, ஏராளமான மரம், செடி, கொடிகள் சாம்பலாகின. இந்நிலையில் நேற்று மதியம், 2:00 மணிக்கு ஏற்காடு முழுதும் மேகமூட்டம் காணப்பட்டது. 2:45 மணிக்கு ஏற்காடு டவுன், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் மழை பெய்தது. 3:20 வரை பெய்த மழையால், உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி அடைந்தனர். 3 மாதங்களுக்கு பின் மழை பெய்ததோடு, சில நாட்களுக்கு பின், வெயில் தாக்கமும் தணிந்தது.வாழப்பாடியில் மழைஅதேபோல் நேற்று மதியம், 3:00 மணிக்கு வாழப்பாடி, குறிச்சி, புழுதிக்குட்டை, கூட்டாத்துப்பட்டி, அனுப்பூர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பின் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.