/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைபாஸ் சாலையில் நிறுத்தப்படும் கோவை பஸ்களால் விபத்து அபாயம்
/
பைபாஸ் சாலையில் நிறுத்தப்படும் கோவை பஸ்களால் விபத்து அபாயம்
பைபாஸ் சாலையில் நிறுத்தப்படும் கோவை பஸ்களால் விபத்து அபாயம்
பைபாஸ் சாலையில் நிறுத்தப்படும் கோவை பஸ்களால் விபத்து அபாயம்
ADDED : செப் 19, 2024 07:40 AM
மகுடஞ்சாவடி: சேலத்தில் இருந்து கோவை செல்லும் பஸ்கள் வந்து செல்ல, காகாபாளையத்தில் சர்வீஸ் சாலை உள்ளது. அச்சாலையில் ஈரோடு, பவானி, சங்ககிரி, திருச்செங்கோடு செல்லும் அரசு, தனியார் பஸ்கள், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே நின்று செல்கின்றன. கோவை செல்லும் தனியார் பஸ்களும் நிற்கின்றன.
ஆனால் கோவை செல்லும் அரசு பஸ்கள் மட்டும், சேலம் - கோவை பைபாஸ் சாலையில் நிறுத்தி பயணியரை ஏற்றுகின்றன. இதனால் பயணியர் அங்கும், இங்கும் அலைமோதும் அவலம் தினமும் தொடர்கிறது. சில நேரங்களில் பயணியர் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. அதனால் சர்வீஸ் சாலையில் கோவை செல்லும் அரசு பஸ்கள் நின்று செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தினர்.