/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாமியார் நகைகளை திருடிஅடகு வைத்த மருமகள் கைது
/
மாமியார் நகைகளை திருடிஅடகு வைத்த மருமகள் கைது
ADDED : ஏப் 16, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமியார் நகைகளை திருடிஅடகு வைத்த மருமகள் கைது
சேலம்:சேலம், கிச்சிப்பாளையம், அம்மையப்பன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி யுவராணி. இவர்களுக்கு ஓராண்டுக்கு முன் திருமணமானது. மணிகண்டனின் தாய் பாக்கியம், 62. இவர்கள் ஒன்றாக வசிக்கின்றனர். கடந்த, 4 முதல், 10 நாட்களில், பாக்கியத்தின் தோடு, மூக்குத்தி, வளையல் என, 8 பவுன் நகைகள் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து பாக்கியம் அளித்த புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்ததில் யுவராணியே, மாமியார் நகைகளை ஒவ்வொன்றாக திருடி அடகு வைத்ததை கண்டுபிடித்தனர். நகைகளை மீட்ட போலீசார், யுவராணியை கைது
செய்தனர்.

