ADDED : ஆக 17, 2026 03:05 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், 35. இவரது மனைவி ஹேமலதா, 30. கடந்த, 13ல் வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வராஜ், திரும்பி வரவில்லை. ஹேமலதா பல்வேறு இடங்களில் தேடியும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் ஹேமலதா நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'முதல்கட்ட விசாரணையில் செல்வராஜ், பல்வேறு இடங்களில் வட்டிக்கு கடன் வாங்கி, அதை கட்ட முடி-யாத வேதனையில் இருந்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் அவரை தேடுகிறோம்'
என்றனர்.
