ADDED : ஆக 17, 2026 03:06 AM
அ நிறம் | அளவு
சேலம்,: மதுரை, ஆனையூர், தமிழ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் இளங்கோவன், 48. பழைய குற்றவாளியான இவர், கடந்த ஜூலை, 27ல் திருட்டு வழக்கில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மூல நோயால் அவதிப்பட்ட அவர், நேற்று காலை, 11:15 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
